தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி


UPDATED : அக் 07, 2026 05:20 AM

ADDED : அக் 07, 2026 01:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 05:20 AM ADDED : அக் 07, 2026 01:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புதுச்சேரி துத்திப்பட்டு சி.ஏ.பி., மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடக்கிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, தொடக்கத்தில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும், கேப்டன் வில் சதர்லேண்ட் மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீட்டெடுத்தது.

அதிரடியாக விளையாடிய நாதன் மெக்ஸ்வீனி 123 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய ஏ அணி 48.2 ஓவர்களில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய ஏ அணி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிஷாந்த் சிந்து 31 ரன்களும், ரஜத் படிதார் 51 ரன்களும் எடுத்துச் சற்று நிதானம் காட்டிய போதிலும், அடுத்தடுத்த இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால் இந்திய ஏ அணி 31.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலிய அணி சார்பில், அபாரமாக பந்துவீசிய மாஹ்லி பேர்ட்மேன் 4, ஸ்பென்சர் ஜான்சன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி 124 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில், ஆஸ்திரேலியா அணி 1– 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2வது ஒரு நாள் போட்டி, வரும் 9ம் தேதி காலை 9:00 மணிக்கு துவங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us