UPDATED : ஏப் 28, 2026 05:55 PM
ADDED : ஏப் 28, 2026 05:51 PM
விழுப்புரம்: வெடிகுண்டு மிரட்டலால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, சென்னை தலைமை செயலகத்திற்கு மர்ம நபர் இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, தலைமை செயலகத்திலிருந்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ஏப்ரல் 28 ஆம் தேதி பகல் 12:30 மணியளவில், சப் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான வெடிகுண்டு நிபுணர் குழுவினர், கலெக்டர் அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனால், ஊழியர்கள் அச்சமடைந்தனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் இல்லாததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
