/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரெஞ்சு துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் புதுச்சேரியில் திடீர் பரபரப்பு
/
பிரெஞ்சு துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் புதுச்சேரியில் திடீர் பரபரப்பு
பிரெஞ்சு துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் புதுச்சேரியில் திடீர் பரபரப்பு
பிரெஞ்சு துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் புதுச்சேரியில் திடீர் பரபரப்பு
ADDED : பிப் 06, 2026 08:26 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர்.
புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, டி.ஜி.பி., அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு அவ்வப்போது இ- மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது.
இந்த இ-மெயில்கள் வி.பி.என்., ஐ.டி., வெளிநாட்டில் இருந்து வருவதால், போலீசார் அதன் தகவலை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடற்கரை சாலை அருகில் கொம்பாஞி வீதியில் அமைந்துள்ள பிரெஞ்சு துாதரகத்திற்கு, நேற்று காலை 11:00 மணிக்கு இ-மெயில் வந்தது.
அதில், பிரெஞ்சு துாதரகத்தில் மர்ம நபர் மூலம் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து துாதரக அதிகாரிகள், அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றினர். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் வெடிகுண்டு பிரிவு போலீசார் மோப்ப நாய் டோனியுடன் விரைந்து சென்று துாதரகம் முழுதும் சோதனையிட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.
ஒன்றரை மணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இ-மெயிலில் குறிப்பிட்ட தகவல் வதந்தி என்பதை உறுதி செய்த பின்னரே போலீசார் நிம்மதியடைந்தனர்.
பாதுகாப்பு நிறைந்த பகுதியில் உள்ள பிரெஞ்சு து ாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயிலில் வந்த சம்பவம் பெரு ம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

