தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு


UPDATED : அக் 27, 2026 08:02 PM

ADDED : அக் 27, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 08:02 PM ADDED : அக் 27, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கி நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி நிதித்துறை துறை சிவக்குமார் வெளியிட்டுள்ள அரசாணை;

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் உற்பத்தி திறன் சாரா போனஸ் வழங்கப்படுகிறது. அதன்படி குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘பி’யில் உள்ள அரசிதழ் பெறாத ஊழியர்களில், இந்த நிதியாண்டில் குறைந்தது 6 மாதம் தொடர்ந்து பணி செய்தவர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது.

இதன்படி, 30 நாள் போனஸ் ரூ.6,908 வழங்கப்படும். அதேபோல், தற்காலி தொழிலாளர்களில், 240 நாள் வேலை செய்தவர்களுக்கு ரூ.1,184 வழங்கப்படுகிறது.

மத்திய துணை ராணுவபடை, ஆயுதப்படை ஊழியர்களுக்கும் இது பொருந்தும். 6 மாதத்திற்கு குறைவாக பணி செய்தவர்களுக்கு, பணி செய்த மாதங்களுக்கு ஏற்ப விகிதாசார அடிப்படையில் போனஸ் வழங்கப்படும். இந்த தொகை 2026–27 நிதி ஆண்டின் பட்ஜெட்டில் இருந்து வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us