/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு போனஸ்: எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

ADDED : அக் 13, 2025 12:49 AM
புதுச்சேரி; கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இணையாக அமைப்பு சாரா மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 80 சதவீதத்தினர் அமைப்பு சாரா தொழிலாளர்களாக உள்ளனர்.
அவர்களின் பணிதான் மாநில மொத்த உற்பத்தியில் பெரும் பகுதியை ஈட்டி பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.
இவர்களுக்கான அமைப்பு சாரா நலச்சங்கம் தற்போது வாரியமாக மாற்றப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தீபாவளி பண்டிகை கால ஊக்கத் தொகையாக கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கவுள்ள ரூ. 6,000 நிதியை, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதற்காக தனியாக நிதியை உருவாக்க மது, பெட்ரோல், டீசல் விற்பனையில் ஒரு சதவீதம் செஸ் வரியை விதித்து அதற்கான நிதியை உருவாக்கலாம்.
தற்பொழுது கட்டுமான நலவாரியத்தில், கடன் பெற்றாவது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 6 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். அதேபோன்று விவசாய தொழிலாளர் நல சங்க உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.2,000 தீபாவளி போனசை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.