
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் போகி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் மார்கழி மாதத்தின் கடைசி நாளும், பொங்கலுக்கு முந்தைய நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
பழையன கழிதலும், புதியன புகுதல் என்பதுபோல், வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை புறக்கணித்து, புதியனவற்றை கொண்டு வரும் நாளாக போகியை கொண்டாடுகின்றனர்.
போகிக்கு முன்னதாக வீட்டை சுத்தம் செய்து வீட்டிற்கு புது வர்ணம் பூசி அழகுப்படுத்துவர்.
நேற்று காலை வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை வாசலில் தீயிட்டு கொளுத்தி எரித்தனர்.
இதனால் புதுச்சேரி நகர பகுதி முழுதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன.