
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் அரசு துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை உள்ளிட்ட பொருட்களை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகப் பை வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் அரசு துவக்கப் பள்ளியில் இலவச புத்தகப் பை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை சுமதி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பாஸ்கர் எம்.எல்.ஏ., பங்கேற்று, மாணவர்களுக்கு புத்தகப் பை, கையேடு, சில்வர் டம்பளர் ஆகிய பொருட்களை வழங்கினார்.