/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு கல்லுாரியில் புத்தக கண்காட்சி
/
அரசு கல்லுாரியில் புத்தக கண்காட்சி
ADDED : அக் 14, 2024 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நுாலகத்தில் புத்தக கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். கல்லுாரி நுாலகர் தீபக் வரவேற்றார்.
கண்காட்சியில் தமிழ், இலக்கியம், இலக்கணம், ஆராய்ச்சி நுால்கள் உள்ளிட்ட ஏராளமான நுால்கள் இடம்பெற்றிருந்தன.
இதனை கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.