ADDED : டிச 31, 2024 05:57 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்நோக்கு சமூக சேவா சங்க கருத்தரங்க கூடத்தில் 20ம் ஆண்டு சட்டநாள் விழா மற்றும் வழக்கறிஞர் மோகன்தாசு எழுதிய 'தமிழ் இலக்கியங்களும், சட்ட அமலாக்கமும் தொகுப்பு-2' நுால் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்ர மணியன் தலைமை தாங்கி, நுாலினை வெளியிட, புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் முதல் நுாலை பெற்றுக் கொண்டார்.
புதுச்சேரி கலைப் பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் நுாலைத் திறனாய்வு செய்தார். நுாலாசிரியர் வழக்கறிஞர் மோகன்தாசு ஏற்புரை வழங்கினார்.
தொடர்ந்து நடந்த 20ம் ஆண்டு சட்டநாள் மற்றும் சட்ட எழுத்தறிவு நாள் விழாவில், அசோக் பாபு எம்.எல்.ஏ., புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சட்டக் கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை வழக்கறிஞர் கோவிந்தராசு தொகுத்து வழங்கினார்.