ADDED : மே 31, 2025 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : யாதவ முன்னேற்ற சங்கம் சார்பில் தியாகி துரை முனுசாமி நுாற்றாண்டு விழா புதுவை தமிழ்சங்கத்தில் நடந்தது.
விழாவிற்கு, சங்கத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு, முனைவர் பவானி பரசுராமன் எழுதிய 'பிரெஞ்சிந்திய விடுதலை போராட்டமும், தியாகி துரை முனுசாமியும்' என்ற நுாலை வெளியிட்டார்.
விழாவில் வேணுகோபால், புதுவை தமிழ்சங்க செயலாளர் மோகன்தாஸ், முனைவர் பூங்குழலி பெருமாள், பவானி பரசுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, நலிந்த குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சங்க பொருளாளர் வரதராசு நன்றி கூறினார்.