ADDED : டிச 31, 2025 04:57 AM

புதுச்சேரி: புதுச்சேரி மூத்த வழக்கறிஞரின் மூன்றாவது நுால் வெளியீட்டு விழா நடந்தது.
புதுச்சேரி மூத்த வழக்கறிஞர் மோகன்தாசுவின் 'குறள் வரிகளும் சட்ட நெறிகளும்' எனும் மூன்றாம் நுாலின் வெளியீட்டு விழா மற்றும் 21ம் ஆண்டு சட்ட நாள் வினாடி - வினாப் போட்டி லப்போர்த் வீதியில் உள்ள பல்நோக்கம் சேவா சங்கத்தில் நடந்தது.வினாடி வினாப் போட்டியில் சட்டக் கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி இதர கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐக்கோர்ட் நீதிபதி கண்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி, நுாலை வெளியிட்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள், சட்ட விழிப்புணர்வாளர் விருது வழங்கப்பட்டது.
மூத்த வழக்கறிஞர் அம்மாவாசை நுால் திறனாய்வு செய்தார். நுாலாசிரியர் வழக்கறிஞர் மோகன்தாசு ஏற்புரை வழங்கினார்.
விழாவில் வழக்கறிஞர்கள் இருவருக்கும், கோர்ட் ஊழியர்கள் இருவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை மோகன்தாசின் வழக்காளிகள் செய்திருந்தனர்.

