தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தட்டச்சு பயிற்சி வகுப்பிற்கு முன்பதிவு துவக்கம்

தட்டச்சு பயிற்சி வகுப்பிற்கு முன்பதிவு துவக்கம்

தட்டச்சு பயிற்சி வகுப்பிற்கு முன்பதிவு துவக்கம்


ADDED : செப் 09, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 08:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான இலவச தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இலவச பயிற்சி வகுப்புகளுக்கு முன்பதிவு துவங்கியுள்ளது.

இதுகுறித்து துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி ரபீந்திரநாத் மோண்டல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், புதுச்சேரி மாநிலத்தில் எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சேர்ந்த மணவர்களுக்கு இலவசமாக தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கவுள்ளது. இந்த வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயில விருப்பமுள்ள மாணவர்கள், புதுச்சேரி, நடேசன் நகரில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி அலுவலகத்தை நேரில் அணுகி தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும், விபரங்களுக்கு 0413– 2200115, 88700 73622 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us