/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆழ்துளை கிணறு பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
/
ஆழ்துளை கிணறு பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : மார் 06, 2024 10:10 PM

புதுச்சேரி : உறுவையாறு கிராமத்தில், ரூ.19.76 லட்சம் மதிப்பில், புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
வில்லியனூர் கொம்யூன், மங்களம் தொகுதி, உறுவையாறு கிராமத்தில், நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையைபோக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை போக்க, பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.19.76 லட்சம் மதிப்பில், புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நேற்று துவங்கியது.
இப்பணியை, வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் உறுவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 4 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் திருவேங்கடம், கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் ரங்கமன்னர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

