/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில குத்துச்சண்டை போட்டி பாக்ஸ் அன்ட் கிராஸ் கிளப் அணி சாம்பியன்
/
மாநில குத்துச்சண்டை போட்டி பாக்ஸ் அன்ட் கிராஸ் கிளப் அணி சாம்பியன்
மாநில குத்துச்சண்டை போட்டி பாக்ஸ் அன்ட் கிராஸ் கிளப் அணி சாம்பியன்
மாநில குத்துச்சண்டை போட்டி பாக்ஸ் அன்ட் கிராஸ் கிளப் அணி சாம்பியன்
ADDED : செப் 04, 2025 02:44 AM

புதுச்சேரி : பாண்டிச்சேரி அமெச்சூர் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி உப்பளம் ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.
சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் நடந்த இப்போட்டிகளில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பாக்ஸ் அன்ட் கிராஸ் கிளப் அணி பெற்றது. 2-ம் இடத்தை அய்யனார் பாக்சிங் அணி பெற்றது. கப் பிரிவில் சென்னை கிளப் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. 2-ம் இடத்தை ஜெயம் பாக்சிங் கிளப் அணி பெற்றது. சிறந்த குத்துசண்டை வீரர் விருதை பாக்ஸ் அன்ட் கிராஸ் கிளப் அணி வீரர் ஹேமந்த் பெற்றார்.
விழாவில், சங்க செயலாளர் கோபு, துணை தலைவர்கள் முத்துகேசவலு, பாபு, கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.