தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெட்டிக் கடைக்காரர் கொலை

பெட்டிக் கடைக்காரர் கொலை

பெட்டிக் கடைக்காரர் கொலை


ADDED : செப் 21, 2024 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2024 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை, : மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் முகமது ரபிக்,55; இவருக்கு அபுரோஜாகனி என்ற மனைவி, 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். வெளிநாடு சென்று திரும்பி வந்த முகமது ரபிக் கோவில்பத்து கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

குடும்ப பிரச்னை காரணமாக கடையிலேயே தங்கியிருந்த இவர், கிராமத்தில் நடைபெறும் கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கடை வாசலில் மர்ம நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவலறிந்த எஸ்.பி., ஸ்டாலின் மற்றும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், முகமது ரபிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, முகமது ரபிக்கை யார், எதற்காக கொலை செய்தனர். என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us