ADDED : அக் 28, 2024 05:44 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : பாண்டிச்சேரி அமெச்சூர் பாக்சிங் அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
சீனியர் யூத், ஜூனியர், சப்-ஜூனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
இதில் 150-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தர்மாபுரி அய்யனார் பாக்சிங் கிளப் பெற்றது. விழாவில் பாண்டிச்சேரி அமெச்சூர் பாக்சிங் அசோசியேஷன் தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கோப்பையை வழங்கினார். விழாவில் துணைத்தலைவர் முத்துக்கேசவலு, பொதுச்செயலாளர் கோபு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
