ஸ்கேட்டிங் அழைத்து சென்றபோது நடந்த விபத்தில் காயமடைந்த சிறுவன் உயரிழப்பு
ஸ்கேட்டிங் அழைத்து சென்றபோது நடந்த விபத்தில் காயமடைந்த சிறுவன் உயரிழப்பு
ADDED : அக் 20, 2026 06:14 PM

வானுார்: வானுார் அருகே பைபாஸ் சாலையில், மகனை ஸ்கேட்டிங் பயற்சிக்கு அழைத்து சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தாய் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மகனும் உயிரிழந்தார்.
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ், 42; பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். இவரது மனைவி குணாவதி, 32; இவர்களது மகன் கீர்த்தன் குருபரன், 8; புதுச்சேரி தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வ ந்தார். கடந்த 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், மகன் கீர்த்தன் குருபரனை, புதுச்சேரி–திண்டிவனம் பைபாஸ் சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.
கீர்த்தன் குருபரன் ஸ்கேட்டிங் செல்ல, தமிழும், குணாவதியும் ஸ்கூட்டியில் பின் தொடர்ந்து சென்றனர். பயிற்சி முடிந்து, இரும்பை அருகே பைபாஸ் சாலையில் சாலையோரம் ஸ்கூட்டியை நிறுத்தி மகனை ஏற்றினர்.
அப்போது, திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த பலினோ கார், ஸ்கூட்டி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் துாக்கி வீசப்பட்ட மூவரில், குணாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் தமிழ், மகன் கீர்த்தன் குருபரன் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், ஜிப்மரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கீர்த்தன் குருபரன் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
விபத்து குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
