ADDED : மார் 21, 2025 05:27 AM
புதுச்சேரி : வேல்ராம்பட்டு ஏரியில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தார்.
முதலியார்பேட்டை, வேல்ராம்பேட் பாண்டியன் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமரன், 39; தச்சுத்தொழிலாளி. இவரது மகன் லத்தீஸ்வர், 13, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார்.
லத்தீஸ்வருக்கு நேற்றுடன் தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டதால், மதியம் அவரது நண்பர்கள் 5 பேருடன் வீட்டின் அருகே உள்ள வேல்ராம்பட்டு ஏரிக்கு சென்றார்.
இதில் லத்தீஸ்வர், அரவது நண்பர் சரண் 10, ஆகியோர் ஏரியில் தவறி விழுந்தனர்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஏரியில் விழுந்த 2 சிறுவர்களையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதித்து, லத்தீஸ்வர் இறந்து விட்டதாக தெரிவித்தார். சரண் ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.