/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவர்கள் கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி அணி வெற்றி
/
சிறுவர்கள் கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி அணி வெற்றி
சிறுவர்கள் கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி அணி வெற்றி
சிறுவர்கள் கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி அணி வெற்றி
ADDED : ஜன 29, 2025 05:42 AM

புதுச்சேரி : 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி பெற்றது.
புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட ஏழு தென் மண்டல மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில், 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான 2 நாள் போட்டித் தொடர் புதுச்சேரி துத்திப்பட்டு சீகெம் மைதானங்கள், லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் சீகெம் மைதானம் 3ல் நடந்த போட்டியில் புதுச்சேரி அணி, கோவா அணி மோதின. முதலில் விளையாடிய கோவா அணி 68.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. தொடர்ந்து விளையாடிய புதுச்சேரி அணி ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து நேற்று ஆடிய புதுச்சேரி அணி 241 ரன்களுக்கு ஆட்டம் இழந்து, 102 ரன்கள் முன்னிலை பெற்றது. புதுச்சேரி அணியின் ரித்திக் 60 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் கோவா அணி 96 ரன்களில் சுருண்டது. புதுச்சேரி அணி இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்களில் அபார வெற்றி பெற்றது. புதுச்சேரி அணியின் அபய் சிங் 7 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்
மற்றொரு போட்டியில், தமிழ்நாடு, ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 374 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி 263 ரன்கள் எடுத்து. தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை புள்ளிகளை பெற்றது . தமிழ்நாடு அணி வீரர் அக் ஷத் ராவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் கர்நாடகா, கேரளா அணிகள் மோதின. கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழந்து 479 ரன்கள் எடுத்து. கேரளா அணி 5 விக்கெட் இழந்து 328 ரன்கள் எடுத்தது. கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் முன்னிலை புள்ளிகளை வென்றது . கர்நாடக அணியின் நிதீஷ் ஆர்யா ஆட்டநாயகன் விருதை வென்றார் .
3 போட்டிகளின் முடிவில், புதுச்சேரி 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், கர்நாடகா, தமிழ்நாடு தலா 3 புள்ளிகளுடன், கேரளா ஹைதராபாத் தலா 1 புள்ளிகளுடன் உள்ளனர்.