/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டை கோவிலில் பிரம்மோற்சவ விழா
/
முத்தியால்பேட்டை கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED : ஜன 28, 2025 06:27 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது.
விழாவை முன்னிட்டு, சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
நாளை ( 29 ம் தேதி) காலை ஹோமம் திருமஞ்சனமும், இரவு மூன்று தங்க கருடசேவை உற்சவமும் நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 6 மணிக்கு திருத்தேர் உற்சவமும், இரவு தீர்த்தவாரியும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.