/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்
/
லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்
லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்
லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : ஆக 26, 2025 07:47 AM
புதுச்சேரி : முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 54ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நாளை (27 ம் தேதி) துவங்குகிறது.
அதனையொட்டி நாளை மாலை அனுக்ஞை, மிருத்சங்கரஹணம், நகர சோதனை விஷ்வக்ேஸனர் வீதி புறப்பாடு நடக்கிறது. மறுநாள் 28 ம் தேதி காலை 8 மணிக்கு துவாஜாரோகணமும், அன்று இரவு ஜ்வாலா நரசிம்மருடன் ஹயக்ரீவர் சந்திரபிரபையில் வீதியுலா நடக்கிறது.
வரும் 29ம் தேதி காலை கிருஷ்ண காயத்ரி ேஹாமம், திருமஞ்சனம், இரவு அகோபில நரசிம்மருடன் சூரிய பிரபையில் சுவாமி வீதியுலா, 30ம் தேதி காலை ஹயக்ரீவ ேஹாமம், திருமஞ்சனம், இரவு வராக நரசிம்மருடன் சேஷ வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.
வரும் 31ம் தேதி காலை சுக்த ேஹாமம், திருமஞ்சனம், இரவு மாலோல நரசிம்மருடன் கருட சேவை, 1ம் தேதி காலை ராமகாயத்ரி ேஹாமம், திருமஞ்சனம், இரவு பார்கவ நரசிம்மருடன் ஹனுமந்த வாகனத்தில் வீதியுலா, 2ம் தேதி காலை சுதர்சன ேஹாமம், திருமஞ்சனம், இரவு காரஞ்ச நரசிம்மருடன் யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
3ம் தேதி புருஷசுக்த ேஹாமம், திருமஞ்சனம், இரவு யோகானந்த மற்றும் சத்ரவட நரசிம்மர்களுடன் சூர்ணோஸ்வ கோரதத்திலும், 4ம் தேதி காலை நரசிம்ம ேஹாமம், திருமஞ்சனம், இரவு பாவன நரசிம்மருடன் புன்னை மர வாகனத்தில் வெண்ணெய்தாழி அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.
5ம் தேதி காலை 9 மணிக்கு ஹயக்ரீவ ஜெயந்தி தேரில் வீதியுலா மற்றும் தீர்த்தவாரி நடக்கிறது. அன்று இரவு துவாதசாராதனம், புஷ்பயாகம், துவஜா அவரோஹணம், பூர்ணாஹூதி சாற்றுமுறை, 6ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.