தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம் 4 பேருக்கு மறுவாழ்வு: 2 பேருக்கு பார்வை 

மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம் 4 பேருக்கு மறுவாழ்வு: 2 பேருக்கு பார்வை 

மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம் 4 பேருக்கு மறுவாழ்வு: 2 பேருக்கு பார்வை 


ADDED : செப் 03, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

  புதுச்சேரி: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, நான்கு பேரின் உயிரைக் காப்பாற்றப்பட்டதுடன்,  இருவருக்கு பார்வை கிடைத்தது.

  தமிழ்நாடு, கடலுார் மாவட்டம் உடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்,பாலசுப்பிரமணியன்,36; இவர் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்து ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றவந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த ஆக.31ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்தார்.

பாலசுப்பிரமணியனின் குடும்பத்தினர் அவரது உறுப்புகளைத் தானமாக வழங்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, அவரிடமிருந்து இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இரண்டு கண்விழிப் படலங்கள் தானமாகப் பெறப்பட்டன.

இதில் இதயம், கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தீவிர உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 4 நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது. மேலும், இரண்டு கண்விழிப் படலங்கள் மூலம் 2 பேருக்கு மீண்டும் பார்வை கிடைத்தது.

உறுப்பு மாற்று சிகிச்சைக் குழுக்கள் மற்றும் அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன், மருத்துவப் பொருத்தம் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் இந்த உறுப்புகள் தகுதியான நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

 அளவிட முடியாத துயரத்திலும் மனிதநேயத்துடன் உறுப்பு தானம் செய்ய முன்வந்த பாலசுப்பிரமணியனின் குடும்பத்தினரின் மனிதாபிமானத்தை ஜிப்மர் நிர்வாகம் பாராட்டியதுடன் நன்றியும் தெரிவித்தது. மறுவாழ்வு பெற்றவர்களும் பாலசுப்பிரமணியன் குடும்பத்திற்கு நன்றி தெரிவித்தனர். 

மேலும், இந்த உறுப்பு தானப் பணியில் திறம்பட செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த ஜிப்மர் நிர்வாகம், பொதுமக்கள் அனைவரும் முன்வந்து உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us