தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபரிடம் நகைகளை வாங்கி  ஏமாற்றிய தாய் மகன் மீது வழக்கு 

வாலிபரிடம் நகைகளை வாங்கி  ஏமாற்றிய தாய் மகன் மீது வழக்கு 

வாலிபரிடம் நகைகளை வாங்கி  ஏமாற்றிய தாய் மகன் மீது வழக்கு 


ADDED : செப் 03, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 அரியாங்குப்பம்: பணத்தை முதலீடு செய்து, லாபம் பெறலாம் என கூறி 12 சவரன் தங்க நகைகளை வாங்கி ஏமாற்றிய தாய், மகன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சச்சின்,22; இவர் புதுச்சேரி அரசு கல்லுாரியில் படித்து வருகிறார். இவரது நண்பரான முருங்கப்பாக்கத்தை சேர்ந்த சண்முகம், 27;

பெரிய அளவில் தொழில் செய்வதாக கூறி பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என சச்சின் தாய் மஞ்சுவிடம் இருந்து கடந்த ஆண்டு, 12 சவரன் தங்க நகைகளை வாங்கினார். 

ஆனால் நகைகளை வாங்கி, லாபம் கொடுக்கததால், அவர் வீட்டுக்கு மஞ்சு இவரது மகன் சச்சின் ஆகிய இருவரும் சென்று நகைகளை கேட்டனர். அதில் சண்முகத்தின் தாய் பாக்கியலட்சுமி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து, மஞ்சு புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், சண்முகம் இவரது தாய் பாக்கியலட்மி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்ய, அரியாங்குப்பம் போலீசாருக்கு உத்தரவிட்டது. போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us