முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம் கல்லுாரி மாணவிகளுக்கு வரவேற்பு
முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம் கல்லுாரி மாணவிகளுக்கு வரவேற்பு
ADDED : செப் 03, 2026 05:32 PM
புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் 2026–27 ம் ஆண்டிற்கான சேர்க்கை பெற்ற இளங்கலை மற்றும் அறிவியல் துறை மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கியது.
கல்லுாரி முதல்வர் மதிவாணன், முதல் முறையாக கல்லுாரிக்குள் நுழைந்த மாணவிகளை வரவேற்று பேசுகையில், பள்ளிப் பருவத்திலிருந்து கல்லுாரிப் பருவத்திற்கு அடி எடுத்து வைக்கும் மாணவிகள், தங்களின் சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கல்லுாரி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மொபைல் பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து, இளங்கலை மாணவிகளுக்கு காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், அறிவியல், வணிகவியல், நிறுமச் செயலரியல் துறை மாணவிகளுக்கு மதியம் 1:15 மணி முதல் மாலை 6:15 மணி வரையிலும் வகுப்புகள் நடத்தப்படும். எனவே, இளங்கலை மாணவிகள் காலையிலும், அறிவியல் துறை மாணவிகள் பிற்பகலிலும் கல்லுாரிக்கு வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
புதிதாக கல்லுாரிக்கு வந்த மாணவிகளை, 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவிகள் ரோஜாப் பூ கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
