அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பேக் வழங்கினார்
அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பேக் வழங்கினார்
ADDED : செப் 03, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்ளுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., பேக் வழங்கினார்.
எம்.எல்.ஏ., சொந்த நிதியில் மாணவர்களுக்கு பேக் வழங்குதல், ஆசிரியர் தினத்தையொட்டி, ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துதல், அறிவியில் கண்காட்சியில், சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி, கவுரவித்தார். தொடர்ந்து, கண்காட்சியில் சிறந்த படைகளுக்கு, பரிசு மற்றும் 296 மாணவர்களுக்கு பேக் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் உமா வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
