தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடலில் குளித்த சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை 

கடலில் குளித்த சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை 

கடலில் குளித்த சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை 


ADDED : செப் 03, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 05:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பழைய துறைமுக கடற்கரை பகுதியில் தடையை மீறி கடலில் குளித்த சுற்றுலா பயணிகளை கடலோர போலீசார், எச்சரித்து வெளியேற்றினர். 

புதுச்சேரியிக்கு அதிகளவு வரும் சுற்றுலா பயணிகள் சீகல்ஸ் ஓட்டல் பின்புறமுள்ள பழைய துறைமுக மணல் திட்டு பகுதியில் குளித்து மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

ஆனால், அப்பகுதியில் ஆவேசமாக வரும் அலைகளில் சிக்கி பலர் கடலில் இழுத்து செல்லப்பட்டு இறந்துள்ளதால், இது அபாயமான பகுதி, யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என, போலீசார் சார்பில் , எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் எச்சரிக்கையை மீறி நேற்று காலை பழைய துறைமுகம் பகுதியில் சுற்றுலா பயணிகள் சிலர் கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். இதைகண்ட கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் மற்றும் லைப் கார்டு வீரர்கள், இனி கடலில் இறங்கி குளிக்க கூடாது என சுற்றுலா பயணிகளை கடுமையாக எச்சரித்து வெளியேற்றினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us