/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு
/
உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு
ADDED : ஜன 15, 2026 07:48 AM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், மாஞ்சாலை பகுதியில் வீர மகா காளிம்மன் கோவில் திருப்பணி நடந்து வருகிறது. நேற்று காலை, கோவில் வெளியில் இருந்த உண்டில் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை 10 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது.
இதுபற்றி, கோவில் சேர்மன் பாலபாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், பைக்கில் வந்த இரண்டு நபர்கள், உண்டியல் பூட்டை உடைத்து,காணிக்கையை திருடி சென்றது தெரியவந்துள்ளது.
அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவிலில் திருப்பணி நடக்கும் நிலையில், உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

