தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி யில் தாய்ப்பால் புகட்டுதல் ஆலோசனை பயிற்சி திட்டம் துவக்கம்

 புதுச்சேரி யில் தாய்ப்பால் புகட்டுதல் ஆலோசனை பயிற்சி திட்டம் துவக்கம்

 புதுச்சேரி யில் தாய்ப்பால் புகட்டுதல் ஆலோசனை பயிற்சி திட்டம் துவக்கம்


ADDED : மே 29, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 05:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தாய்ப்பால் புகட்டுதல் ஆலோசனை பயிற்சி திட்டம் துவக்கப்பட்டது.

புதுச்சேரி மதர் தெரசா முதுகலை மற்றும் ஆராய்ச்சி சுகாதார அறிவியல் நிறுவனம், ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, புதுச்சேரி நர்சிங் சங்க கிளை மற்றும் இந்திய தாய்ப்பால் ஊக்குவிப்பு நெட்வொர்க் ஆகியவற்றுடன் இணைந்து, தாய்ப்பால் புகட்டுதல் மற்றும் கைக்குழந்தை மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவு ஆலோசகர்கள் என்ற தலைப்பில் ஏழு நாள் பயிற்சித் திட்டம் துவக்கப்பட்டது.

ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த துவக்க நிகழ்ச்சியில் சுகாதார துறை இயக்குநர் செவ்வேள் வாழ்த்தி பேசினார். டாக்டர் மஞ்சுபாலா தாஷ் வரவேற்றார். சுகாதார மற்றும் குடும்ப நலச் சேவைகளின் துணை இயக்குநர் ஆனந்தலட்சுமி தொடங்கி வைத்தார்.

மருத்துவக் கண்காணிப்பாளர் அய்யப்பன் ஆரோக்கிய மேம்பாட்டில் தாய்ப்பால் ஆலோசனையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். புதுச்சேரி மாநில நர்சிங் சங்க கிளையின் தலைவர் ஸ்ரீதேவி, துணை தலைவர் காந்திமதி, செயலாளர் சத்தியக்கன்னி தேசியப் பயிற்சியாளர்களான கார்த்திகேயன், சுப்ரியா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

உகந்த தாய்ப்பால் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து முறைகளை ஊக்குவிப்பதில் சுகாதார நிபுணர்களின் அறிவு மற்றும் ஆலோசனைத் திறன்களை வலுப்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் மகாராஷ்டிரா, ஷில்லாங், மேகாலயா, பெங்களூரு, திருச்சி, மதுரை, திருப்பதி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

டாக்டர் ஜெயஸ்ரீ குருஷேவ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us