ADDED : ஆக 08, 2025 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி வண்ணாங்குளம் ஆரம்ப சுகாதார மையத்தில் ரோட்டரி கிளப் பாண்டிச்சேரி மெரினா சார்பில், தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கலந்து கொண்டு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சத்துணவு பெட்டகம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்.
இதில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் அனந்தலட்சுமி, டாக்டர்கள் சரண்யா, பாலாஜி, ரோட்டரி கிளப் பாண்டிச்சேரி மெரினா தலைவர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.