sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்: ஹிந்து பெண் பலாத்காரம்; தலைமுடியை வெட்டிய கும்பல்

/

வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்: ஹிந்து பெண் பலாத்காரம்; தலைமுடியை வெட்டிய கும்பல்

வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்: ஹிந்து பெண் பலாத்காரம்; தலைமுடியை வெட்டிய கும்பல்

வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்: ஹிந்து பெண் பலாத்காரம்; தலைமுடியை வெட்டிய கும்பல்

18


UPDATED : ஜன 06, 2026 12:56 AM

ADDED : ஜன 06, 2026 12:51 AM

Google News

UPDATED : ஜன 06, 2026 12:56 AM ADDED : ஜன 06, 2026 12:51 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்து விதவை பெண்ணை, இருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், மரத்தில் கட்டிப்போட்டு அவரின் தலை முடியை வெட்டி துன்புறுத்தினர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கடந்தாண்டு பொறுப்பேற்றது. அது முதல், அந்நாட்டில் ஹிந்து மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

சமீப காலமாக இத்தாக்குதல்கள் மிக கொடூரமாக மாறியுள்ளது. ஹிந்துக்கள் மீதான இந்த வன்முறைகளை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் யூனுஸ் கண்டும் காணாதது போல் இருந்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, வங்கதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள ஜெனைதா மாவட்டத்தின் காளிகஞ்சில், 40 வயது மதிக்கத்தக்க ஹிந்து விதவை பெண் ஒருவரை இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அத்துடன் நிற்காமல் அப்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவரின் தலை முடியை வெட்டியுள்ளனர்.

இது குறித்து அப்பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அவரின் புகாரில் தெரிவித்திருப்பதாவது:

இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காளிகஞ்சில் ஷாஹின் மற்றும் அவரது சகோதரியிடம் இருந்து இரண்டு மாடி வீடுகளுடன், மூன்று சென்ட் நிலம் வாங்கினேன். அதன் பின், ஷாஹின் என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் தொடர்ந்து என்னை துன்புறுத்த துவங்கினார்.

இந்நிலையில், கடந்த வாரம் என் வீட்டில் அத்துமீறி நுழைந்த ஷாஹினும், அவரது கூட்டாளி ஹசனும் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், என்னிடம் பணம் கேட்டு மிரட்டினர். நான் பணம் கொடுக்க மறுத்ததால் என்னை மரத்தில் கட்டிப்போட்டு, என் முடியை வெட்டினர். மேலும் என்னை சித்ரவதை செய்ததால் நான் மயக்கமானேன்.

என்னை அங்குள்ள மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதை தங்கள் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.

புகாரை பதிவு செய்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்பெண்ணிற்கு உறுதியளித்துள்ளனர். மேலும், அப்பெண்ணிற்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us