
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா நடந்தது.
புதுச்சேரி மாநில அரசு சார்பில், தாய்ப்பால் வார விழா கடந்த 1ம் தேதி முதல் வரும் 7ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, புதுச் சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா நடந்தது.
குடும்பநல மற்றும் குழந்தைகள் நலத்துறை, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், சுகாதார துறை இயக்குனர் செவ்வேள், குடும்ப நல மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை இயக்குனர் ஆனந்தலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன், மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரொசாரியோ, குழந்தைகள் நல பிரிவு துறை தலைவர் அனுராதா உட்பட பலர் பங்கேற்றனர்.