/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குழவி கல்லைபோட்டு முதியவர் கொலை கொத்தனார் கைது
/
குழவி கல்லைபோட்டு முதியவர் கொலை கொத்தனார் கைது
ADDED : ஏப் 22, 2025 04:35 AM

அரியாங்குப்பம்: முன்விரோதத்தில் முதியவரை கிரைண்டர் குழவி கல்லை தலையில் போட்டு கொலை செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே உள்ள இடையார்பாளையம் என்.ஆர்., நகரை சேர்ந்தவர் சுந்தர் (எ) பாஸ்கர், 65, இவர் கடந்த 19ம் தேதி நள்ளிரவு 1:00 மணியளவில், இவர் தங்கிருந்து வீட்டின் அருகே தலையில் பலத்த காயத்துடன், அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து,அதே பகுதியை சேர்ந்த தமிழரசனை, 35, பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், கொலை செய்யப்பட்ட முதியவர், மது போதையில், தமிழரசனை திட்டி வந்தார். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு, தமிழரசன் மது போதையில், முதியவரை கத்தியால் வெட்டினார். இதனால், இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி என்.ஆர்., நகர் அருகே உள்ள மதுபாரில் குடித்து விட்டு வெளியில் வந்த போது, இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
அன்று நள்ளிரவில், முதியவர் தங்கியிருக்கும் வீட்டு அருகே, வெளியில், கிடந்த கிரைண்டர் குழவி கல்லால் போதையில் இருந்த முதியவரை, தலையில் கல்லை போட்டு தமிழரசன் கொலை செய்ததும், ஓவர் போதையில் இருந்த தமிழரசன் நிதானமில்லாமல், அருகிலேயே படுத்து துாங்கியுள்ளார் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தவளக்குப்பம் போலீசார் தமிழரசன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
போலீஸ் அலட்சியத்தால் கொலை?
கடந்த 3 ஆண்டுக்கு முன், முதியவரை கத்தியால் வெட்டிய தமிழரசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாமல், சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். போலீசார் மீது பயம் இல்லாமல், முதியவர் கொலை செய்யப்பட்டற்கு முக்கிய காரணமாகும்.
தவளக்குப்பம் பகுதியில் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுயில் மது குடித்து வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் அருகே பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் பாரில் மது வாங்கி வந்து நள்ளிவு 2:00 மணிவரை குடிப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.