நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர், பழைய காமராஜர் நகரை சேர்ந்தவர் பாண்டியன், 40; கொத்தனார். இவருக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், சரியாக வேலைக்கு செல்வதில்லை. இதனால், அவரது மனைவி பிரியா கோபித்துக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன், தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பாண்டியன், அவரது தாய் அமிர்தம் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 27ம் தேதி இரவு அமிர்தம், பாண்டியனுக்கு உணவு கொடுத்துவிட்டு, வெளியே சென்றார் .
மறுநாள் (28ம் தேதி), அமிர்தம் வீட்டிற்கு சென்றார். கதவு உள் பக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை தட்டி பார்த்தும் திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவர் ஜன்னல் திறந்து பார்த்தார். பாண்டியன் மின் விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின்பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

