நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: குடும்ப பிரச்னையில் கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம், மாஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 37; கொத்தனார். இவர், மது குடித்ததால், கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையில், அவரது மனைவி கோபித்து கொண்டு, தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

