/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலம் புனரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
பாலம் புனரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : அக் 07, 2025 12:55 AM

பாகூர்; கீழ்பரிக்கல்பட்டு தாங்கள் வாய்க்காலில் பழுதான நிலையில் உள்ள பாலத்தை, 25 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில், புனரமைக்கும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் தொகுதிக்குட்பட்ட கீழ்பரிக்கல்பட்டு தாங்கல் வாய்க்காலில் குறுக்கே உள்ள பாலம் பழுதடைந்துள்ளது.
இந்த பாலத்தை, பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு சார்பில் 25 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைத்து, இரண்டு புறங்களிலும் பாதுகாப்பு சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ. பணியை துவக்கி வைத்தார். இதில், பொதுப்பணித்துறை நீர்ப்பாசனப் பிரிவு உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் ஜெயரமணன் மற்றும் கீழ்பரிக்கல்பட்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.