sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரேஷன் கார்டிற்கு லஞ்சம் வாங்கிய புரோக்கர் கைது

ரேஷன் கார்டிற்கு லஞ்சம் வாங்கிய புரோக்கர் கைது

ரேஷன் கார்டிற்கு லஞ்சம் வாங்கிய புரோக்கர் கைது


ADDED : செப் 21, 2025 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2025 06:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ரேஷன் கார்டை பிரித்து வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில், மேலும் ஒரு புரோக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் அய்யனார்; கூட்டு குடும்ப ரேஷன் கார்டை பிரித்து, தனியாக கார்டு வழங்க, குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதன்பேரில் கள ஆய்வு செய்த வட்டார ஆய்வாளர் சற்குணம், புரோக்கர் பாலகுமாரனை சென்று சந்திக்கும் படி கூறியுள்ளார்.

இதையடுத்து, பாலகுமரனை அய்யனார் தொடர்பு கொண்டபோது, ரூ.10 ஆயிரம் கொடுத்தால், ரேஷன் கார்டு வழங்குவதாகவும், முன்பணமாக ரூ.5 ஆயிரம் கொடுக்கும்படி கேட்டார். அந்த பணத்தை அய்யனார், ஜி.பேவில் அனுப்பி வைத்தார்.

பின், மீதி பணத்தை சற்குணம் கேட்டபோது, இதில் விருப்பம் இல்லாத அய்யனார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, கடந்த ஜூலை 30ம் தேதி சற்குணத்தை தொடர்பு கொண்ட அய்யனார், மீதி பணம் ரூ. 5 ஆயிரத்தை எங்கு வந்து கொடுப்பது எனக் கேட்டார். அதற்கு பாலகுமாரனை பஸ் ஸ்டாண்டிற்கு அனுப்பி வைப்பதாகவும், அங்கு அவரிடம் கொடுக்குமாறு கூறினார்.

அதன்படி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த அய்யனாரிடம், பணத்தை வாங்கிய பாலகுமாரனை, அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பின் அந்த பணத்தை பாலகுமாரனிடம் இருந்து தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே ஆய்வாளர் சற்குணம் வாங்கியபோது, அவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது வழக்கு பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு புரோக்கரான கூடப்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ்குமார், 36; லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us