/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அண்ணனை மண்வெட்டியால் வெட்டிய தம்பி கைது
/
அண்ணனை மண்வெட்டியால் வெட்டிய தம்பி கைது
ADDED : மே 29, 2025 11:32 PM

காரைக்கால்: காரைக்காலில் சொத்து தகராறில் அண்ணனை மண்வெட்டியால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், கோட்டுச்சேரி மாருதி நகரை சேர்ந்தவர் பிரிட்டோ, 50; பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தம்பி அகஸ்டின், 45. இவர் பீகார் மாநிலத்தில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன், இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர்.
நேற்று முன்தினம் பிரிட்டோ, அகஸ்டின் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அகஸ்டின் தோட்டத்தில் இருந்த மண்வெட்டியால் பிரிட்டோவை வெட்டினார். தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடைந்த பிரிட்டோவை உறவினர்கள் மீட்டு, அரசு மருந்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து, அகஸ்டினை கைது செய்தனர்.