சுற்றுலா பயணிகளை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு பதிவு
சுற்றுலா பயணிகளை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு பதிவு
UPDATED : அக் 22, 2026 12:00 AM
ADDED : அக் 21, 2026 10:04 PM
புதுச்சேரி: தர்மபுரி மாவட்டம், பொரத்துார் பகுதியை சேர்ந்வர் காவேரி மகன் பிரவீன்,22; இவர் தனது நண்பர்களான மாதையன்,34; லட்சுமணன்,27; முத்து, 29; கண்ணன்,30, ஆகியோருடன் ஆயுத பூஜையை கொண்டாடிவிட்டு, காரில் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.
பாண்டி மெரினா கடற்கரையில் குளித்து விட்டு ஐந்து பேரும் தங்கள் காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அவர்களின் கார் வம்பாகீரப்பாளையம் பழைய கலங்கரை விளக்கம் அருகே வந்த போது, யமாகா எம்.டி., பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த சாந்தகுமார் மகன்கள் கிரிதரன்,25; பவித்ரன்,23; ஆகியோர் காரில் வந்தவர்களை தாக்கினர். மேலும் காரின் முன்புற மற்றும் பின் புற கண்ணாடியை அடித்து நொறுக்கினர். காயமடைந்த பிரவீன் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து பிரவீன் கொடுத்த புகாரின் பேரில், கிரிதரன், பவித்ரன் மீது ஒதிஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
