தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு கேள்வி சுகாதார துறை வழிகாட்டுதல் வெளியீடு

 பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு கேள்வி சுகாதார துறை வழிகாட்டுதல் வெளியீடு

 பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு கேள்வி சுகாதார துறை வழிகாட்டுதல் வெளியீடு


ADDED : ஜூன் 01, 2026 09:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 09:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 3ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சென்டாக் பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு கடந்தாண்டை போல பொது நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 18ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஜூன் 1ம் தேதி வரை விண்ணப்பிக்க கடைசி தேதியாக குறிப்பிட்டு இருந்த நிலையில் இந்த காலக்கெடு 3ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

நர்சிங் படிப்பிற்கு வரும் 14ம் தேதி நுழைவு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி பி.எஸ்சி., நர்சிங் பொது நுழைவுத்தேர்வு நிபந்தனைகளை வெளியிட்டுள்ளன.

பொது நுழைவு தேர்வு கேள்விகள் எப்படி கேட்கப்படும் என்றும் சுகாதார துறை தெளிவுப்படுத்தி வெளியிட்டுள்ளது.

நர்சிங் நுழைவு தேர்வு கேள்விகள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பாடத்திட்டத்தின் தரத்தில், மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தலா 20 மதிப்பெண்கள் வீதம் 5 பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.

நர்சிங் ஆப்டிடியூட் 20 மதிப்பெண்கள், இயற்பியல் 20 மதிப்பெண்கள், வேதியியல் 20 மதிப்பெண்கள், உயிரியல் 20 மதிப்பெண்கள், ஆங்கிலம் - 20 மதிப்பெண்களுக்கு கேள்ளிகள் கேட்கப்படும்.

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற தகுதிப் பெர்சண்டைல் அவசியம்.

பொதுப்பிரிவினர்-50, பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள்-45, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர்-40 எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள்-40 பெர்சண்டைல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

இடஒதுக்கீடு கொள்கை மத்திய-மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., இடபுள்யூஎஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். கீழ் மூட்டு குறைபாடு 40 முதல் 50 சதவீதம் வரை உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இக்குறைபாட்டை மாநில மருத்துவக் குழுவின் அங்கீகாரம் பெற்ற மருத்துவ அதிகாரி மற்றும் நர்சிங் நிபுணர் அடங்கிய குழு பரிசோதித்து முடிவு செய்யும் என, சுகாதாரத் துறை இணை இயக்குநர் மேரி ஜோசபின் சித்ரா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us