/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மாதம் கடைப்பிடிப்பு
/
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மாதம் கடைப்பிடிப்பு
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மாதம் கடைப்பிடிப்பு
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மாதம் கடைப்பிடிப்பு
ADDED : ஏப் 07, 2025 06:18 AM
புதுச்சேரி; பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த 'ஏப்ரல் - 2025' வாடிக்கையாளர் சேவை மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து முதன்மை பொது மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பு:
இந்தியாவின் முன்னணி அரசு தொலை தொடர்பு நிறுவனம் பி.எஸ்.என்.எல்.,வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக 'ஏப்ரல் - 2025' மாதத்தை வாடிக்கையாளர் சேவை மாதமாக கடைபிடிக்கிறது.
இந்த சிறப்பு வாடிக்கை யாளர் சேவை மாதத்தில் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துதல், நெட்ஒர்க் தரத்தை மேம்படுத்துதல், வாடிக்கையாளர்களுடன் தொடர்பை வலுப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.
மேலும், வாடிக்கையாளர் சேவை மையங்களில் புகார்களை தீர்ப்பது, குறை தீர்வு முகாம்கள் நடத்துவது, நீண்டகால புகார்களை உடனே சரிசெய்வது மற்றும் ஆன்லைன் மூலம் சேவைகள் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகள், பரிந்துரைகள், சேவை கோரிக்கைகள், புகார்களை https://cfp.bsnl.co.in/ என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.