தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., விற்பனை மேளா புதுச்சேரியில் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., விற்பனை மேளா புதுச்சேரியில் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., விற்பனை மேளா புதுச்சேரியில் நாளை துவக்கம்


ADDED : ஜூலை 20, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா நாளை துவங்கி 4 நாட்கள் நடக்கிறது.

முதன்மை பொதுமேலாளர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா நாளை (21ம் தேதி) முதல் 24ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அலுவலகம், கரியமாணிக்கம், வில்லியனுார், திருக்கனுார், சஞ்சீவி நகர், அரும்பார்த்தபுரம், திருபுவனை, கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில், மதகடிப்பட்டு மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு மேளாவில் ரூ.289 மதிப்புள்ள புதிய சிம் கார்டு ரூ.100 மட்டுமே.

இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அளவில்லாமல் அழைப்புகள் இலவசம். வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள சிம்கார்டுகள் பற்றி விபரம் அறிந்து கொள்ள 94428 24365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

எப்டிடிஎச் மறு இணைப்பு மற்றும் நிலுவை தொகையை தள்ளுபடியில் வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் வில்லியனுார், மேட்டுப்பாளையம் மையங்களில் நடக்கிறது.

கே.ஓய்.சி., அப்டேட் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தாங்களிடம் உள்ள குறுஞ்செய்தியுடன் மேளா நடக்கும் இடத்தை அணுகி அப்டேட் செய்து கொள்ளவும். மேலும் புதிய 4 ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 ஜிபி டேட்டாவையும் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us