/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா விழிப்புணர்வு ஊர்வலம்
/
பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா விழிப்புணர்வு ஊர்வலம்
பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா விழிப்புணர்வு ஊர்வலம்
பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : அக் 09, 2025 02:06 AM

புதுச்சேரி: பி.எஸ்.என்.எல்., 25வது நிறுவன தினத்தையொட்டி, வெள்ளி விழா விழிப்புணர்வுஊர்வலம் நடந்தது. புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் திலகவதி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தின் எதிரே துவங்கிய ஊர்வலம் ரங்கப்பிள்ளை வீதி, அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி, வழியாக சென்று, மீண்டும் அலுவலகத்தினை அடைந்தது.
துணை பொது மேலாளர், அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், எப்.டி.டி.எச்,. சேனல் பங்குதாரர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு பி.எஸ்.என்.எல்., சேவைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன.
புதிய சலுகைகள் பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா எப்.டி.டி.எச்., திட்டம் 625 என்ற பெயரில் புதிய பைபர் பிராட்பேண்ட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் 75 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் 2500 ஜி.பி., வரை டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், ஓ.டி.பி., சேவைகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு சலுகையாக ரூ.225- எஸ்.டி.வி., பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 30 நாட்களுக்கு தினமும் 2.5 ஜி.பி., டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அளவில்லா அழைப்புகள் வழங்கப்படுகின்றன.
செயலி புதிய பி.எஸ்.என்.எல்.., செல்ப்கேர் செயலியில் மொபைல் லேண்ட்லைன், எப்.டி.டி.,எச்., சேவைகளை எளிதாக நிர்வகிக்க முடியும். இந்த செயலியில் தனிப்பயன் டாஸ்போர்டு, ரீசார்ஜ், பில்லிங், புகார் பதிவு பெற்ற அம்சங்கள் உள்ளன. மொபைல் வாடிக்கையாளர்கள் 1800-4444 என்ற வாட்ஸ் ஆப் எண்ணியில் HI என அனுப்பி, கணக்கு விபரங்கள், பில்லிங், ரீசார்ஜ் புதிய திட்டங்கள், புதிய சேவைகளை, புகார் உதவிகளையும் பெறலாம் என, முதன்மை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.