பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்
ADDED : ஜூன் 10, 2026 04:43 AM
புதுச்சேரி: புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று துவங்குகிறது.
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., துணை பொது மேலாளர் செய்திக்குறிப்பு:
முகாம், ரங்கபிள்ளை வீதி, பொது தொலைபேசி நிலைய அலுவலகம், மேட்டுப்பாளையம், ஆனந்தா இன் அருகில், நாவற்குளம் அன்னை நகர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், திருவண்டார்கோவில், வில்லியனுார், கரியமாணிக்கம், அரியாங்குப்பம், ராஜிவ் காந்தி ஆஸ்பிடல் அருகில், வில்லியனுார் சங்கர் வித்யாலயா பள்ளி எதிரில், ஆரியபாளையம், மடுகரை, திருக்கனுார், கோட்டுகுப்பம் இந்தியன் பேங்க் அருகில், லாஸ்பேட் ராஜிவ் பார்க் எதிரில், கரிகாலாம்பாக்கம், மற்றும் வில்லியனுார் ஆகிய இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4 ஜி சேவையை ஊக்குவிக்க, வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்., எப்.ஆர்.சி.,-51 ரூ. 51-க்கு வழங்கப்பட உள்ளது. இந்த சிம் கார்டில் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் அழைப்புகள் இலவசம்.
இந்த சலுகையை பொதுமக்கள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள், அனைத்து ரீடைலர்கள் கடைகள், வில்லியனுார், மேட்டுப்பாளையம் மெயின் தொலைபேசி நிலைய வாடிக்கையாளர்கள் சேவை மையங்கள் மற்றும் மேளா நடைபெறும் இடங்களில் இந்த சிம் கார்டை பெற்று கொள்ளலாம்.
இவ்விடங்களில் பொதுமக்கள் தங்களது 2ஜி மற்றும் 3ஜி சிம் கார்டை புதிய 4ஜி சிம்மாக இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். வாடிக்கையாளர் தங்களிடம் உள்ளது 4ஜி சிம் கார்டுதானா என அறிந்து கொள்ள 9442824365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.
பி.எஸ்.என்.எல்லின் புதிய எப்.டி.டி.எச்., திட்டமான பேசிக் என்.இ.ஓ., உடன் அதிவேக இணையத்தை வெறும் ரூ.449 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் விவரங்களுக்கு வாட்ஸ் ஆப் செய்யவும் அல்லது 18004444 என்ற எண்ணிற்கு டயல் செய்யவும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
