தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'நோ பார்க்கிங்'கில் நிறுத்திய வாகனத்திற்கு அபராதம் 

 'நோ பார்க்கிங்'கில் நிறுத்திய வாகனத்திற்கு அபராதம் 

 'நோ பார்க்கிங்'கில் நிறுத்திய வாகனத்திற்கு அபராதம் 


ADDED : ஜூன் 10, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 04:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்திய மினி டேங்கர் வாகனம் ஓட்டிய டிரைவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலில் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சிக்னல் மற்றும் முக்கிய சாலையில் வாகனங்களை நிறுத்த கூடாது என, போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திரா சதுக்கம் பகுதியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சிக்னல் அருகில் நோ பார்க்கிங் பகுதியில் மினி டேங்கர் வாகனம் நின்றது. அதையடுத்து, போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை நிறுத்திய வாகன டிரைவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தினர்.

மேலும், நோ பார்க்கிங் மற்றும் சிக்னல் பகுதியில் வாகனத்தை நிறுத்த கூடாது என, டிரைவரை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us