தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் நாளை துவக்கம்


ADDED : பிப் 16, 2025 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா நாளை துவங்குகிறது.

உதவி பொதுமேலாளர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா நாளை (17ம் தேதி) முதல் 19ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அலுவலகம், லாஸ்பேட்டை ராஜிவ் பார்க், பத்துக்கண்ணு ஜங்ஷன், கரிய மாணிக்கம், மண்ணாடிப் பட்டு, வில்லியனுார், கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி, தவளக்குப்பம், மதகடிப்பட்டு மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு மேளாவில் ரூ.108 மதிப்புள்ள சிம்கார்டு ரூ. 50 மட்டுமே. இந்த சிம்காட்டில் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாமல் அழைப்புகள் இலவசம். வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள சிம்கார்டுகள் பற்றி விபரம் அறிந்து கொள்ள 94428 24365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம். சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே.

புதிய 4ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 ஜிபி இலவச டேட்டாவையும் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us