/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.டெக்., முதலாண்டு வகுப்புகள் துவக்கம்
/
பி.டெக்., முதலாண்டு வகுப்புகள் துவக்கம்
ADDED : ஆக 29, 2025 03:18 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் 2025-26ம் கல்வியாண்டு பி.டெக்., மாணவர்களுக்கான முதலாண்டு வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது.
திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு இயக்குநர் செல்வராஜ் வரவேற்றார். துணைவேந்தர் மோகன் தலைமை தாங்கி, மாணவர்கள் புதுமைகளை படைத்து, தலைமை பண்புகளை வளர்த்து, பாரம்பரியத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றார்.
பேராசிரியர் விவேகானந்தன் தொழில்துறைக்கு தேவையான திறன்கள் மற்றும் விரிவான கல்விசார் திட்டங்கள் குறித்தும், பேராசிரியர் ஞானு பிளோரன்ஸ் சுதா அறிவுசார் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி குறித்தும் பேசினர்.
பொறுப்பு பதிவாளர் சுந்தரமூர்த்தி நிர்வாக அமைப்பு மற்றும் மாணவர் நலன் சார்ந்த கொள்கைகள் குறித்து விளக்கினார். ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சாருலதா, அஜய் விமல்ராஜ், கஜலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.