தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்ஜெட்: சட்டசபை துளிகள் 

பட்ஜெட்: சட்டசபை துளிகள் 

பட்ஜெட்: சட்டசபை துளிகள் 


ADDED : ஆக 24, 2026 10:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 10:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்டசபை துளிகள்

புதுச்சேரி சட்டசபை வரலாற்றில் எப்போதும் நிரந்தர சபாநாயகர் தான் கூட்டத் தொடரை தலைமை தாங்கி நடத்துவார். முதல் முறையாக தற்காலிக சபாநாயகர் அன்பழகன் கூட்டத் தொடரை நடத்தி, அந்த பெருமை பெற்றுள்ளார். 

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்

 கவர்னர் உரைக்கு முன்னதாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இரண்டாவதாக தேசிய பாடலான வந்தே மாதரம், 3வதாக தேசியகீதம் பாடப்பட்டது. 

வழக்கமாக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் முதல் நாளில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சபை தொடங்கும். அதேபோல இந்த முறையும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் வந்தே மாதரம் பாடலும் முதல்முறையாக இடம் பெற்றது.

கவர்னர் 53 நிமிடங்கள்

முதல்வர் 1.40 நிமிடங்கள்

 சட்டசபைக்கு 9.30க்கு வந்த கவர்னர் கைலாஷ்நாதன் 9.40 மணிக்கு தனது உரையை தொடங்கினார். 10.33 மணிக்கு கவர்னர் தனது உரையை முடித்தார்.  53 நிமிடங்கள் கவர்னர் உரையாற்றினார்.

இதேபோல் பட்ஜெட் உரையை மாலை 3 மணிக்கு முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து வாசிக்க துவங்கினார். 1.40 மணி நேரம் 86 பக்க உரையை வாசித்த முதல்வர் ரங்கசாமி 4.30 மணிக்கு நிறைவு செய்தார்.

உள்ளே ஒன்னும் இல்லப்பா...

ஜான்குமார் லகலக...

 முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தபோது, எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் மரபுபடி சூட்கேசில் பட்ஜெட் உரை நகல் அளிக்கப்பட்டது. இதனை கண்ட பார்வையாளர் மடத்தில் இருக்கும் சிலர், சூட்கேசில் உள்ளே இருப்பது எண்ணவாக இருக்கும் என மண்டைய குடைய, ஜான்குமார் எம்.எல்.ஏ., விடம் சைகை காட்டி கேட்டேவிட்டனர். அதை பார்த்த ஜான்குமார் எம்.எல்.ஏ., சூட்கேசை திறந்து ஒன்வொன்றாக வெளியே எடுத்து காட்டி, சூட்கேசசையும் துாக்கி காட்டி உள்ளே நீங்க நினைக்கிற மாதிரி ஒன்றும் இல்லப்பா என்றதும், பார்வையாளர் மடத்தில் ஒரே சிரிப்பலை எழுந்தது.   

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us