பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் சிறப்பு கூறு திட்ட நிதியாக ரூ.642.38 கோடி ஒதுக்கீடு
பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் சிறப்பு கூறு திட்ட நிதியாக ரூ.642.38 கோடி ஒதுக்கீடு
ADDED : ஆக 24, 2026 10:24 PM
பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு கூறு திட்ட நிதியாக 642.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தடையின்றி கல்வி கற்று, கல்வியில் முன்னேற்றம் அடைய அவர்களுக்கு அளித்து வரும் கல்வி உதவித்தொகையை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இத்துறையின் அனைத்து நலத்திட்டங்களும் பொதுமக்களுக்கு திறம்பட, வெளிப்படை தன்மையுடன் அவர்களுக்கு ஏற்ற வகையில் கிடைப்பதற்கு ஏதுவாக மின்னணுமயமாக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு முழுமையான கல்வி கட்டணம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2025–26ம் நிதியாண்டில் 1ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை படிக்கும் சுமார் 12 ஆயிரம் மாணவர்களுக்கு 80 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.
