மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பட்ஜெட் என்.ஆர்.காங்., நந்தா ஜெயஸ்ரீதரன் கருத்து
மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பட்ஜெட் என்.ஆர்.காங்., நந்தா ஜெயஸ்ரீதரன் கருத்து
ADDED : ஆக 24, 2026 10:24 PM
புதுச்சேரி: அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பட்ஜெட் என என்.ஆர்.காங்., சிறப்பு அழைப்பாளர் நந்தா ஜெயஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பயணம், தொழில் முனைவோர்களுக்கு புதுச்சேரியில் ஒருங்கிணைந்த விற்பனை மையம் அமைப்பது, சட்ட ஒழுங்கு நிலைநிறுத்த பொதுமக்களின் பாதுகாப்பு அளித்து அமைதியான சூழ்நிலை உறுதி செய்து இருப்பது. தேசிய விளையாட்டு போட்டிகள் , கடற்கரை விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கும் உறுதி செய்திருக்கிறது. பெண்கள் சமூக பாதுகாப்பு, பொருளாதார நலனை வலுப்படுத்த நோக்கில் தற்போது திருமண நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதித்தொகை உயர்த்துவது அரசு முடிவு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்கள் திருமணத்திற்கு 35 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாகவும், ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவை மகளின் திருமணத்திற்கு நிதி உதவி 40 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ஆகவும், விதவை மற்றும் மறுமண நிதி உதவி 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாகவும், ஏழை ஆதி திராவிட பழங்குடி பெண்களுக்கு திருமணம் நிதியை ஒரு லட்சத்திலிருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் என இந்த நிதி ஆண்டில் உயர்த்தி வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது.
இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களையும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
