தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்ஜெட் தாக்கல்

 பட்ஜெட் தாக்கல்

 பட்ஜெட் தாக்கல்


ADDED : ஜூன் 26, 2026 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி சட்டசபையில் ஜூலை 2வது வாரத்தில்... மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு

புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. தேர்தல் காரணமாக நிதி ஆண்டான 2026--27க்கு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை. இதற்கு பதிலாக அரசின் செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 15-வது சட்டசபையில் நிதி பொறுப்பு வகித்த முதல்வர் ரங்கசாமி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 5 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரத்து 396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி அரசு இந்த ஐந்து மாதம் முடிந்ததும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த இடைக்கால பட்ஜெட் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகின்ற நிலையில் ஜூலை 17ம் தேதி ஆடி பிறக்கின்றது. ஆகஸ்ட் மாதம் 17 ம்தேதி வரை நீடிக்கின்றது. இம்மாதத்தில் பொதுவாக சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பர். எனவே ஆடி வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாகவே புதுச்சேரி அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். குறிப்பாக ஜூலை 2வது வாரத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான பட்ஜெட்டினை புதுச்சேரி அரசு இறுதி செய்து, தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் மத்திய நிதி அமைச்சகம்-ஜனாதிபதியின் அனுமதி கிடைத்ததும், அதன் பிறகு பட்ஜெட் தாக்கலுக்கான வேலைகள் விறுவிறுப்பாக துவங்கும். கடந்தாண்டு 14,100 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், திருத்தப்பட்ட பட்ஜெட் இது. முதலில் 13,600 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடப்பட்டது. செலவினங்கள் அதிகரித்ததால் பட்ஜெட் தொகை அதிகரித்தது. எனவே இத்தொகையில் 10 சதவீதம் வரை புதுச்சேரி அரசின் பட்ஜெட் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பட்ஜெட் எப்போது பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ள சூழ்நிலையில், இதுவரை அமைச்சர்களுக்கு இலாக்கா ஏதும் ஒதுக்கப்படவில்லை. இன்றோ, நாளையோ இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டு ஜூலை 2ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, ஜூலை 9ல் கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கலாம் எனவும்,அநேகமாக வரும் ஜூலை 16ல் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் எனவும், அதன் பிறகு ஜூலை முழுக்க பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த உள்ளதாக முதல்வர் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us